ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள கார்காய் நதியருகே கடந்த 28ஆம் தேதி 21 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அந்த இளம் பெண்ணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது.
கடந்த 27ஆம் தேதி அந்த இளம்பெண் தனது காதலன் ராகுல்(19) என்பவரை பார்ப்பதற்கு சென்றுள்ளார். அப்போது ராகுல் உடலுறவில் ஈடுபட முயன்றார் அதற்கு இளம்பெண் மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் கோபத்தில் ராகுல் தனது காதலியை கல்லால் அடித்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றது தெரியவந்தது. இதனால் ராகுலை போலீசார் கைது செய்தனர்.