தேசிய மருத்துவ ஆணையத்தின் தலைவர் டாக்டர் பி என் கங்காதர் பெயரில் போலி அழைப்புகள் வருவதாகவும் இந்த அழைப்புகளை யாரும் நம்ப வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக என் எம் சி வெளியிட்ட அறிவிப்பில், தேசிய மருத்துவ ஆணையர் டாக்டர் கங்காதர் என்று கூறிக்கொண்டு 70503 92639 என்ற கைபேசி எண்ணில் இருந்து மர்ம நபர் ஒருவர் பலரிடம் பேசி வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

அந்த எண் தேசிய மருத்துவ ஆணையத்தின் தலைவருக்கு சொந்தமானது கிடையாது. இது போன்ற அழைப்புகளை பொதுமக்கள் மற்றும் மருத்துவத் துறையினர் யாரும் நம்பி ஏமாற வேண்டாம். அத்தகைய போலி நபருடன் உரையாடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் என் எம் சி பெயரில் தவறான தகவல்கள் பரப்பப்படுவதை தடுப்பதற்கு பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.