உகாண்டாவின் எல்லையில் கிழக்கு காங்கோ நகரமான காசிண்டியில் உள்ள தேவாலயத்தில் தீவிரவாதிகள் திடீர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 15 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என அந்த நாட்டு ராணுவம் கூறியுள்ளது. இது குறித்து ராணுவ செய்தி தொடர்பாளர் அந்தோணி முஅலுஷாய் கூறியதாவது, இந்த சம்பவம் நேசநாட்டு ஜனநாயக படைகளால் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம்.
மேலும் ஏ.டி.எப் என்பது உகாண்டா போராளி குழுவாகும். பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த போதிலும் இந்த சம்பவத்தின் பின்னணியில் ஏ.டி.எப் தான் இருக்கிறது என்பதை முதல் அறிகுறிகள் காட்டுகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும் ஏ.டி.எப் இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பொறுப்பேற்கவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.