காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவுமான இவிகேஎஸ் இளங்கோவன் இன்று உடல்நல குறைவினால் காலமானார். அவருக்கு 75 வயது ஆகும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இவர் கடந்த நவம்பர் 13-ஆம் தேதி சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் பாதிப்பினால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவருக்கு மூச்சு திணறல் பிரச்சனை ஏற்பட்டது.

இதனால் வென்டிலேட்டர் உதவியுடன் அவர் சிகிச்சையில் இருந்த நிலையில் இன்று காலை அவருடைய உடல் நலம் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்த நிலையில் உயிரிழுந்து விட்டார். அவருடைய மகன் திருமகன் ஈவெரா கடந்த வருடம் உடல் நலக்குறைவினால் உயரிழந்த நிலையில் அந்த தொகுதியில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில் அவருடைய மகனின் மரணம் அவரை மிகவும் பாதித்துவிட்டது.

இந்நிலையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் தந்தை பெரியாரின் அண்ணன் ஈவே கிருஷ்ணசாமியின் மகன் இவிகே சம்பத் என்பவரின் மகன். பெரியாரின் பேரனான இவர் கடந்த 2004 முதல் 2009 ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவி வகித்துள்ளார். இவருடைய மறைவுக்கு தற்போது பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். மேலும் இந்த நிலையில் தற்போதும் மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் திரு ஈவிகேஎஸ் இளங்கோவன் அவர்கள் கடந்த நவம்பர் மாதம் 13ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மருத்துவ பணியாளர்களும் முயற்சி செய்தபோதிலும் அவர் இன்று காலமானார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.