காங்கிரஸ் தலைவர் ஈவிகேஸ் இளங்கோவனின் மகன் ஈவெரா கடந்த ஜன.4ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இவர் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர். இவருடைய மறைவால் இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி அண்மையில் வெளியானது. பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் ஜனவரி 31ஆம் தேதி ஆரம்பமாகிறது.
இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. இங்கு 1800 425 94890என்ற இலவச தொடர்பு எண்ணில் தொடர்பு கொண்டே 24 மணி நேரமும் தேர்தல் குறித்த புகார்களை தெரிவிக்கலாம் என தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த புகார் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.