
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 27ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்று, தேர்தலில் மொத்தம் 77 பேர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலை முன்னிட்டு ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் பிப்ரவரி 27ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்காளர்களாக பதிவு செய்த அனைத்து ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.