சென்னையில் CM ஸ்டாலின் முன்னிலையில் அரசு மற்றும் நிசான் நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

தமிழ்நாடு அரசு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் விதமாக பல்வேறு தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து வருகிறது. இதனால் பலருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கிறது. அந்தவகையில் தமிழ்நாடு அரசுக்கும் ரெனால்ட் நிஸ்ஸான் நிறுவனத்திற்குமான ரூ.3,300 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.

ரூ.5.300 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் 2,000 பேருக்கு புதிய வேலைவாய்ப்பு கிடைக்கும் என தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது. ஓரகடத்தில் இயங்கி வரும் நிசான் கார் தயாரிப்பு ஆலை விரிவாக்கத்திற்காக இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.