ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை முன்னிட்டு பறக்கும் படையினர்,போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் தீவிர வாகன சோதனை நடத்தி வருகிறார்கள்.
இந்த கண்காணிப்புகளை மீறி இரவு நேரங்களில் விடிய விடிய வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் ஒரு கட்சி சார்பில் ஒரு ஓட்டுக்கு 3000 ரூபாயும் மற்றொரு கட்சி சார்பில் ஒரு ஓட்டுக்கு 2000 ரூபாயும் பட்டுவாடா செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இது போல் சில இடங்களில் ஒரு கட்சி ஒரு ஓட்டுக்கு ஐந்தாயிரம் ரூபாய் வரை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.