ஈரோடு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்குப்பதிவுக்காக 52 இடங்களில் 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. இதில் 32 வாக்குச்சாவடிகள் பதட்டமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டு, துணை ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர்.

வாக்குப் பதிவு பணியில் 1206 ஊழியர்கள் பணியாற்றி வரும் நிலையில், காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவை மக்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில் ஆதார் அட்டையை காட்டி வாக்களிக்க வரும் வாக்காளர்களை அனுமதிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கிடைக்கப்பெறும் புகார்கள், மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.