இந்திய ரயில்வேயில் பாதுகாப்பு படையில் 19,800 கான்ஸ்டபிள் பதவிக்கான ஆள்சேர்ப்பு நடைபெறுவதாக ஒரு செய்தி இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கிறது. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள ரயில்வே நிர்வாகம், ரயில்வே பாதுகாப்பு படை அல்லது ரயில்வே அமைச்சகம் தங்களது அதிகாரபூர்வ இணையதளத்தில் எந்த ஒரு அறிவிப்பையும் இதுபோன்று வெளியிடவில்லை. எனவே இத்தகைய செய்திகளை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என்று விளக்கம் அளித்துள்ளது.

இந்தியாவில் சமீப காலமாகவே பல மோசடி சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில் தற்போது வேலைவாய்ப்பற்ற இளைஞர்களை குறிவைத்து மோசடி நிகழ்த்தும் வகையில் ரயில்வேயில் வேலை வாய்ப்பு இருப்பதாக உலா வரும் செய்தி முற்றிலும் போலியானது என தற்போது விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதனால் யாரும் இது போன்ற செய்தியை நம்பி ஏமாற வேண்டாம்.