ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 19 வயது இளம் பெண். இந்த பெண்ணை அவருடன் படித்த சமய சந்துரு என்ற வாலிபர் ஆசைவார்த்தை கூறி காதலித்து வந்த நிலையில் பாலியல் பலாத்காரம் செய்து அதை செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார். இந்த வீடியோவை வைத்து மிரட்டி அவருடைய நண்பரான தனுஷும் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதை அவர்கள் வீடியோவாக எடுத்த நிலையில் இந்த வீடியோவை மிரட்டி 17 வயது சிறுவன் ஒருவரும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். இதற்கிடையில் இளம் பெண்ணுக்கு திருமணம் வைத்த போது அந்த வீடியோவை மணமகன் வீட்டிற்கு அனுப்பி திருமணத்தை அவர்கள் நிறுத்தினர்.

இதனால் பாதிக்கப்பட்ட இளம் பெண் திருவாடனை மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சமய சந்துரு, தனுஷ் மற்றும் 17 வயது சிறுவன் உட்பட 3 பேரை கைது செய்தனர். இந்நிலையில் இளம் பெண்ணின் வீடியோ மற்றும் புகைப்படங்களை காண்பித்து வேறு சிலரும் அவரை பாலியல் பலாத்காரம் செய்தது தற்போது தெரியவந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய மதினீஸ்வரன் (19), முபின் (20), கவின் (19), முகமது ரிஸ்வான் (30) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் வழக்கில் தொடர்புடைய ஒருவர் வெளிநாட்டுக்கு சென்று விட்டதால் அவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.