முதலீடு நோக்கத்தில் தங்க ஆபரணங்களை வாங்குபவர்கள் அதற்கு மாற்றாக தங்க பத்திரத்தில் முதலீடு செய்து சேமிக்கலாம். இதன் சிறப்பு வட்டியும் கிடைக்கும் என்பதுதான். பிப்ரவரி 12 முதல் பிப்ரவரி 16 வரை தங்க பத்திரங்களை வங்கி, தபால் நிலையங்களில் 24 கேரட் மதிப்பில் வாங்கலாம். இந்த முறை தங்க பத்திரத்தில் ஒரு கிராமின் விலை ரூ.6,263 ஆகும். இதனை ஆன்லைன் மூலமாக பெற விரும்புவோருக்கு 50 ரூபாய் கூடுதல் தள்ளுபடியும் வழங்கப்படும்.