இன்று முதல் மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகனம் நிறுத்துவதற்கு கட்டண தள்ளுபடி வழங்கப்படுவதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. மெட்ரோ ரயில் நிலையங்களில் பயண அட்டையை பயன்படுத்தி வாகனங்களை நிறுத்திவிட்டு பயணம் செய்யலாம், அதே நாளில் திரும்ப எடுக்கும்போது வாகன நிறுத்த கட்டணத்தில் தள்ளுபடி வழங்கப்படும். கட்டண விவரங்களை https://chennaimetrorail .org/parking-tariff என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

பணமில்லா பரிவா்த்தனைகளை ஊக்குவிக்கும் விதமாக பாதுகாப்பான கட்டண முறைக்காகவும், அத்துடன் பணப் புழக்கத்தைக் குறைக்க வேண்டிய தேவைக்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பயண அட்டையை பயன்படுத்தி ரயில்களில் பயணிப்பவா்களுக்கு 20 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.