தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத் தேர்வு இந்த மாதம் நடைபெற உள்ள நிலையில் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் இன்று (ஜூன் 20) தேதி முதல் தங்களுடைய ஹால் டிக்கெட் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த நிலையில் எட்டாம் வகுப்பு தேர்வுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது. நடப்பு எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தனித்தேர்வு ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் இன்று  முதல் விண்ணப்பிக்கலாம். இதற்காக www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்தப்பட்டுள்ளது. விண்ணப்ப கட்டணத்தோடு 500 ரூபாய் கூடுதல் செலுத்தி தட்கல் முறையிலும் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.