காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று அனைத்து பள்ளிகளும் செயல்படும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தொடர் மழையின் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கபட்டது. இதன் காரணமாக அந்த பணி நாட்களை ஈடு செய்யும் வகையிலும், மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடைபெறுவதாலும் புதன்கிழமை பாடவேளையை பின்பற்றி இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் இயங்கும் என கூறப்பட்டுள்ளது.