மத்திய அரசின் கீழ் இயங்கும் power grid, CTUIT, Damodar valley corporationஆகிய நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்கள் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் assistant officer trainee, management trainee உள்ளிட்ட பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெற உள்ளது. மொத்தம் 15 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயது 28க்குள் இருக்க வேண்டும்.
இந்த பணிக்கு டிசம்பர் மாதத்தில் நடைபெற உள்ள நெட் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் எனவும் அவர்களுக்கு நெட் தேர்வில் பெரும் மதிப்பெண்ணை பொறுத்து குழு தேர்வு மற்றும் நேர்காணல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க பிப்ரவரி 11 முதல் மார்க் 5ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மேலும் கூடுதல் விவரங்கள் அறிய https://www.powergrid.in/ என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.