நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) ஒரு முக்கிய செய்தியை வெளியிட்டுள்ளது. அந்த அடிப்படையில் SBI வங்கி தன் ஊழியர்களுக்கு முக்கியமான உத்தரவு ஒன்றை பிறப்பித்திருக்கிறது. அதாவது, காப்பீட்டு திட்டங்களை வாடிக்கையாளர்களின் விருப்பம் இல்லாமல் திணிக்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வங்கி ஊழியர்கள் டார்கெட்டை ஈடுசெய்வதற்காக வாடிக்கையாளர்கள் தலையில் தேவையற்ற காப்பீடுகளை கட்டிவந்தனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஊழியர்களுக்கு பெரிய ஆப்பாக வைத்துள்ளது.