இந்தியாவில் அனைத்து வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகின்றன. இந்த நிலையில் உத்தர பிரதேசத்தில் பிரதாப்கரை சேர்ந்த தேசிய நகர்ப்புற கூட்டுறவு வங்கி மற்றும் மும்பையை சேர்ந்த சர்வோதயா கூட்டுறவு வங்கிகள் மீது ரிசர்வ் வங்கி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதாவது வங்கிகளின் நிதி நிலைமை மோசம் அடைந்து வருவதை கருத்தில் கொண்டு ரிசர்வ் வங்கி இத்தகைய நடவடிக்கையை எடுத்துள்ளது.

இந்த வங்கிகளுக்கு தடை விதிக்கப்பட்டாலும் தகுதியான டெபாசிட்தாரர்கள் டெபாசிட் இன்சூரன்ஸ் மற்றும் கிரெடிட் மற்றும் கியாரண்டி கார்ப்பரேஷன் அமைப்பிடம் இருந்து டெபாசிட் இன்சூரன்ஸ் தொகையை ஐந்து லட்சம் ரூபாய் வரை பெறலாம். அது மட்டும் அல்லாமல் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் சர்வோதயா சக்காரி வங்கி மற்றும் தேசிய நகர்ப்புற கூட்டுறவு வங்கியில் ஒழுங்குமுறை சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதால் டெபாசிட் தாரர்களின் வேறு எந்த கணக்கிலும் உள்ள மொத்த இருப்பிலிருந்து 15 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுக்க முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.