இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை விரும்புவதால் ரயில்வே துறை பயணிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் தொடர்ந்து வழங்கி வருகிறது. அதிலும் குறிப்பாக டிக்கெட் முன்பதிவு செய்வது தற்போது மிகவும் எளிதாகி விட்டது. ஆன்லைன் மூலமாக வீட்டில் இருந்து கொண்டே டிக்கெட்டை முன் பதிவு செய்து விடலாம். இருந்தாலும் சில நேரங்களில் புறநகர் ரயில்களில் எதிர்பாராத விதமாக ஏற்படும் இணையதள கோளாறு காரணமாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதில் சிக்கல் ஏற்படுவதாகவும் இதனால் ரயில் டிக்கெட் விலை முன்பதிவு செய்ய முடியவில்லை என பயணிகள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் விதமாக முன்பதிவு இல்லா பெட்டிகளுக்கான டிக்கெட் மற்றும் புறநகர் ரயில்களுக்கான டிக்கெட் புக்கிங் முறையில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. அதாவது இனி புறநகர் ரயில்களில் ரயில் நிலையத்திலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவிற்குள் டிக்கெட்டை புக் செய்யலாம் என்று ரயில்வே புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.