தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வாகன ஓட்டிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் போக்குவரத்து துறை சார்பாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து தற்போது வாகனங்களில் வழக்கறிஞர் மற்றும் மருத்துவர் போன்ற ஸ்டிக்கர்களை ஒட்டக்கூடாது என்று தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதனை எதிர்த்து மருத்துவர்கள் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவர்களுக்கு மட்டும் இடைக்கால விலக்களித்துள்ளது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி கார்களில் கட்சிக்கொடி கட்டுவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுகின்றதா என கேள்வி எழுப்பினார். அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்தனர்.