கட்டட முடிவு சான்று இல்லாமலேயே மின் இணைப்பு வசதி, குடிநீர் குழாய் வசதி, பாதாள சாக்கடை இணைப்பு வசதிகளை பெறலாம் என நகராட்சி நிர்வாகத்துறை உத்தரவிட்டுள்ளது.

கட்டட முடிவு சான்று இல்லாமலேயே மின் இணைப்பு, வசதி அதேபோல குடிநீர் குழாய் வசதி, பாதாள சாக்கடை இணைப்பு வசதிகளை பெறலாம் என நகராட்சி நிர்வாக துறை உத்தரவிட்டுள்ளது. நகராட்சி நிர்வாகத்துறை உத்தரவை அமல்படுத்தியதால் இனி கட்டட முடிவு சான்றிதழ் இல்லாமலேயே மின் இணைப்பு வசதி பெறலாம் என மின்வாரியத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து வீடுகள், தொழிற்சாலை கட்டிடங்கள் அனைத்திற்கும் மின் இணைப்பு வசதிகள், குடிநீர் குழாய் வசதி,  பாதாள சாக்கடை வசதி  ஆகியவற்றை பெறுவதற்கு எப்போதும் கட்டட முடிவுற்ற பிறகு கட்டிட சான்றிதழ் கொடுத்த பின்பு தான் இணைப்பு வசதிகளை பெற முடியும்..

ஆனால் அதில் இருக்கக்கூடிய பல்வேறு சிக்கல்களை கவனத்தில் கொண்டு தொடர்ந்து பொதுமக்கள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் ஒவ்வொன்றையும் தனித்தனியாக பரிசோதனை செய்து அந்த சான்றுகளை கொடுக்கலாம் என உத்தரவு கொடுக்கப்பட்டுள்ளது. நகரப்புற உள்ளாட்சி பகுதிகளில் கட்டி முடிக்கப்பட்ட கட்டடங்களுக்கு மின் இணைப்பு வசதி பெற காலதாமதம் ஏற்படதாக தொடர்ந்து புகார் எழுந்து வந்தது.. அதனை தொடர்ந்து உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு இந்த வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. எனவே முழுமையாக கட்டடங்கள் நிறைவு பெறுவதற்கு முன்னதாகவே பாதுகாப்பு ஏற்பாடுகள் போன்றவை எல்லாம் செய்யப்பட்டிருந்தால், அதனை உறுதி செய்து அந்த அடிப்படையில் குடிநீர், மின் இணைப்பு மற்றும் மின் இணைப்பு போன்றவற்றிற்கான வசதிகள் இணைப்புகளை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது..