எஸ்.எஸ்.சி தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி தேதி ஒரு வார காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசின் காலியாக உள்ள 11,409 பணியிடங்களுக்கான எஸ்.எஸ்.சி தேர்வு அறிவிப்பை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டு இருந்தது. அதன்படி காலியாக உள்ள ஒன்றிய அரசின் பணியிடங்களுக்கான தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க பிப்ரவரி 17ஆம் தேதி, அதாவது வரை விண்ணப்பிக்க கால அவகாசம் என்பது  வழங்கப்பட்டிருந்தது. ஆனால் கடந்த 3 நாட்களாக இணையதளம் முடங்கியதால் தேர்வர்கள் அதிர்ச்சியடைந்தனர். எனவே அதனை சரிசெய்து காலஅவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என மதுரை எம்.பி சு. வெங்கடேசன் மற்றும் தேர்வர்கள் கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில் காலியாக உள்ள ஒன்றிய அரசின் பணியிடங்களுக்கான தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க பிப்ரவரி 24ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது.. இணையதளம் முடங்கியதால் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் தேவர்கள் அவதிக்குள்ளான நிலையில், அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.  ஏற்கனவே இன்றோடு விண்ணப்பிப்பதற்கான காலம் முடிவடைய இருந்த நிலையில் இணையத்தில் ஏற்பட்ட கோளாறு சரி செய்யப்பட்டு பிப்ரவரி 24ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.. கால அவகாசம் நீட்டிக்கப்பட்டதால் எம்.பி சு. வெங்கடேசன் உள்ளிட்டோர் நன்றி தெரிவித்துள்ளனர்..