வெளிமாநிலங்கள், அயல்நாடுகளுக்கு பணிக்குச் சென்று எதிர்பாராத விதமாக உயிரிழக்கும் தமிழர்களின் குடும்பத்திற்கு மாத ஓய்வூதியம் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் குழந்தைகள், இளம் மாணவர்கள் தாய் தமிழ்நாட்டின் மரபின் பெயர்களோடு உள்ள தொடர்பை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் வருடத்திற்கு 200 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு தமிழ்நாடு பண்பாட்டு சுற்றுலாவுக்கு அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் அயல்நாடுகளில் வெளிமாநிலங்களில் பணிக்கு சென்று அங்கு எதிர்பாராத விதமாக உயிரிழந்து விடும் தமிழர்களின் குடும்பத்திற்கு மாத ஓய்வூதிய திட்டம் அறிமுகம் செய்யப்படும். வெளிநாடுகளுக்கு செல்வார் குறித்த தரவு தளம் ஏற்படுத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.