ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு கணக்கு நிர்வாக பணிக்கான இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் மூலமாக எஸ்சி மற்றும் எஸ் பி பிரிவை சேர்ந்த இளைஞர்களுக்கு தனியார் வங்கி மற்றும் நிதித்துறை சார்ந்த நிறுவனங்களில் பணியாற்றுவதற்கு ஏதுவாக கணக்கு நிர்வாக பணிக்கான பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்கள் 22 முதல் 33 வயது உள்ளவராகவும் பிஏ, பிகாம் மற்றும் பிஎஸ்சி கணித முடித்த பட்டதாரி ஆகவும் இருக்க வேண்டும். இந்த பயிற்சி 20 நாட்கள் நடைபெறும் எனவும் சென்னையில் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தில் தங்கி படிக்கும் வசதிகள் ஏற்படுத்தி தரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பயிற்சியை முழுமையாக முடிக்கும் பயிற்சியாளர்கள் அனைவருக்கும் நிறுவனத்தால் நடத்தப்படும் பயிற்சி தேர்வுக்கு அனுமதிக்கப்பட்ட பின்பு தேர்ச்சி பெற்றால் வங்கி நிதி சேவை காப்பீட்டு நிறுவனத்தில் சான்றிதழ் வழங்கப்படும். இதில் தொடக்கத்தில் மாத ஊதியமாக 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை வழங்கப்படும் எனவும் இந்த பயிற்சியை பெறுவதற்கு தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும் கூடுதல் விவரங்களுக்கு 9445029456 மற்றும் 044-25246344 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.