கடலில் மீன்வளத்தை பாதுகாப்பதற்காக மீன்வளத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தற்போது மீனவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதாவது சுருக்குமடி விலை மற்றும் இரட்டைமலை பயன்படுத்தக் கூடாது என அறிவித்துள்ளது. சாதாரண வலைகளைக் காட்டிலும் சுருக்குமடி வலை மற்றும் இரட்டை மடி வரை பயன்படுத்தி அதிக அளவிலான மீன்களை பிடிக்கின்றனர். இந்த வலைகளை கடலின் உட்பரப்பிற்கு உட்படுத்துவதால் அதிக மீன்கள் பிடிக்கப்படுவது மட்டுமல்லாமல் கடலின் அடிப்பகுதியில் உள்ள இயற்கை சூழ்நிலையும் பாதிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக மீன்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல் மீன்களின் இனப்பெருக்கத்திலும் சிக்கல்கள் ஏற்படுகின்றன. இதன் காரணமாக மீனவர்கள் இரட்டை மடிவலைகளை பயன்படுத்தி மீன் பிடிக்க கூடாது என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இரட்டை மடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடித்தால் அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக புதுச்சேரி மாநில மீன்வளத்துறை அமைச்சர் புதிய அறிக்கை வெளியிட்டுள்ளார்.