தமிழகத்தில் அனல் காற்றினால் சென்னை உட்பட பல முக்கிய நகரங்களில் உள்ள வீடுகளில் மின் பயன்பாடு அதிகம் உள்ளது. அதனால் இரவில் மின்விநியோகப் பெட்டி உள்ளிட்ட மின் சாதனங்கள் பழுதாகி மின்தடை ஏற்படுகின்றது. இதனால் மக்கள் பலரும் இரவில் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக இரவில் ஏற்படும் பழுதை சரி செய்வதில் தாமதம் ஏற்படுகிறது. இந்நிலையில் இரவு 9 மணி முதல் அதிகாலை 2 மணி வரை பிரிவு அலுவலகங்களில் இருக்க வேண்டும் எனவும் காலையில் அலுவலகத்திற்கு சற்று தாமதமாக வந்தாலும் பரவாயில்லை என்று பிரிவு அலுவலக பொறியாளர்களை மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.