தமிழகத்தில் கூட்டுறவு துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் கூட்டுறவு சங்கங்களும், பண்டகசாலைகளும், 370 மருந்தகங்களையும் மற்றும் 300 பல் பொருள் அங்காடிகளையும் நடத்தி வருகின்றது. இவற்றில் மருந்து, மாத்திரைகள் மற்றும் மளிகை பொருட்கள் ஆகியவை விற்பனை செய்யப்படுகின்றன. வெளி சந்தையை ஒப்பிடுகையில் கூட்டுறவு அங்காடிகளில் குறைந்த விலைக்கு பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் காலை முதல் இரவு வரை மட்டுமே இவை செயல்படும் என்பதால் வீடுகளுக்கு டெலிவரி செய்வதில்லை.

இந்த நிலையில் கூட்டுறவு பண்டக சாலைகளும் மளிகை மற்றும் மருந்துகளை டெலிவரி செய்யும் திட்டத்தை இரண்டு மாதங்களில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இது முதல் கட்டமாக சென்னையில் தொடங்கப்படும் என்றும் வாடிக்கையாளர்களிடமிருந்து ஆர்டரை பெற மொபைல் செயலி மற்றும் இணையதளம் வடிவமைப்பு போன்றவை ஏற்படுத்துவது தொடர்பாக அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.