திருவனந்தபுரம் கோட்டத்தில் பராமரிப்பு பணி காரணமாக குருவாயூர் விரைவு ரயில் சேவை இன்று ஜனவரி 21 மற்றும் 28 ஆகிய தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்னை எழும்பூரில் இருந்து தினமும் காலை 9 மணிக்கு புறப்படும் குருவாயூர் விரைவறையில் மறுநாள் காலை 6.40 மணிக்கு கேரளத்தின் குருவாயூர் சென்றடையும்.

இந்நிலையில் திருவனந்தபுரம் கோட்டத்தில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால்  ஜனவரி 21 மற்றும் ஜனவரி 28 ஆகிய இரண்டு நாட்களிலும் கேரளத்தின் சாலக்குடி மற்றும் குருவாயூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். மேலும் இந்த தேதிகளில் சென்னை எழும்பூர் முதல் சாலக்குடி வரை மட்டுமே விரைவு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.