புதுச்சேரி மாநில சுற்றுலாத்துறை மற்றும் காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பில் நான்கு நாட்கள் பொங்கல் விழா, கார்னிவெல் திருவிழா என்ற பெயரில் நடைபெற்று வருகிறது. மூன்றாவது நாளாக நேற்று கால்நடைத்துறை சார்பாக குதிரை ரேக்ளா பந்தயம் வரிச்சகுடி பகுதியில் நடைபெற்றது. இந்நிலையில் காரைக்காலில் நடைபெற்று வரும் கார்னிவல் திருவிழா காரணமாக இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இன்று இயங்காது எனவும் இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக வேறு ஒரு நாள் அறிவிக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.