மத்திய அரசின் இலவச மொபைல் ரீசார்ஜ் திட்டத்தின் கீழ் அனைத்து இந்திய பயனர்களுக்கும் 28 நாட்கள் இலவச ரீசார்ஜ் வழங்கப்படுவதாக வாட்ஸ் அப்பில் செய்தி ஒன்று பரவி வருகிறது. ஆனால் இது முற்றிலும் தவறான தகவல் என மத்திய அரசின் PIB Fact check தெரிவித்துள்ளது. மேலும் அத்தகைய திட்டம் எதுவும் மத்திய அரசால் அறிவிக்கப்படவில்லை எனவும் இது போன்ற செய்திகளை நம்பி மக்கள் யாரும் ஏமாற வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளது.