இந்தியாவில் தேநீர் பிரியர்களின் எண்ணிக்கை மிக அதிகம், ஆனால் சாலை ஓரங்களில் சுகாதாரமற்ற முறையில் தேநீர் தயாரிக்கும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எக்ஸ் தளத்தில் @Murti_Nain என்பவரால் பகிரப்பட்ட இந்த வீடியோவில், சாலை ஓரம் தேநீர் தயாரிக்கும் நபர் ஒருவர், ஈக்கள் மொய்த்துக் கொண்டிருக்கும் சர்க்கரையை எடுத்து தேநீரில் கலப்பது பதிவாகியுள்ளது.

அந்த நபர் எவ்விதத் தயக்கமும் இன்றி, ஈக்கள் நிறைந்த சர்க்கரையை தேநீர் கோப்பையில் போட்டு, நன்கு கலந்து வாடிக்கையாளருக்கு வழங்குவது பார்ப்போரைக் குமட்ட வைக்கிறது.

அங்கிருப்பவர்கள் இதைக் கண்டும் தடுக்காமல் இருப்பது மேலும் அதிர்ச்சியளிக்கிறது. இந்த வீடியோவைப் பார்த்த இணையவாசிகள், சுகாதாரமற்ற முறையில் தேநீர் தயாரிக்கும் அந்த நபரின் செயலுக்குக் கடும் கண்டனங்களையும், நகைச்சுவையான விமர்சனங்களையும் பதிவிட்டு வருகின்றனர்.