இங்கிலாந்தைச் சேர்ந்த 32 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், இணையத்தின் வாயிலாகப் பரிச்சயமான அமெரிக்க நாட்டைச் சேர்ந்த நபரிடம் விசித்திரமான கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளது நீதிமன்ற ஆவணங்கள் மூலம் வெளிவந்துள்ளது. தான் சொல்லும் நிபந்தனைகளின்படி தன்னைத் தாக்கிக் கொலை செய்யும்படி அந்தப் பெண் அமெரிக்க நபரிடம் கூறியுள்ளார்.
இதற்காக அந்த அமெரிக்க நபருக்கு அவர் சுமார் 4,000 டாலர்களைத் தொகையாக வழங்கியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இணையத்தின் மூலம் உருவான இந்த விநோதமான மற்றும் ஆபத்தான ஒப்பந்தத்தின் அடிப்படையில், அமெரிக்காவில் உள்ள புளோரிடா பகுதிக்குச் சென்ற அந்தப் பெண் கொடூரமான முறையில் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
பின்னர் புளோரிடாவில் உள்ள ஒரு குறிப்பிட்ட இடத்தில் அந்தப் பெண் சடலமாக மீட்கப்பட்டதைத் தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணையைத் தொடங்கினர். இந்த வழக்கில் தொடர்புடைய 53 வயது அமெரிக்க நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளதோடு, அவர் மீது கொலை மற்றும் வன்கொடுமை உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
