தமிழகத்தில் அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் மற்றும் மூத்த குடிமக்களுக்கு சலுகை என அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தில் அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் மற்றும் மூத்த குடிமக்களுக்கு சலுகை என அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சமீபத்தில் கூட காவலர்களுக்கு இலவச பயணம் குறித்த அறிவிப்பு வெளியானது.

இந்த நிலையில் இசை கலைஞர்களுக்கு நடைமுறையில் உள்ள பேருந்து சலுகைகளை தோய்வின்றி வழங்க வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. நாட்டுப்புற கலைஞர்கள் உள்ளிட்டோர் தொழில்முறையாக பயணிக்கும் போது 50 சதவீதம் கட்டண சலுகையை வழங்க வேண்டும் எனவும் இசைக்கருவிகளை கட்டணம் இன்றி அரசு பேருந்துகளில் எடுத்து செல்லலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கையில் இசைக்கருவியுடன் பயணிக்க அனுமதி மறுத்தது சர்ச்சையான நிலையில் அரசு விளக்கமளித்துள்ளது.