தமிழக ஆளுநர் ரவியை முன்னாள் அதிமுக எம்எல்ஏவும் எம்.பியுமான கேசி பழனிசாமி சந்தித்து பேசியுள்ளார். அதன் பிறகு ஆளுநரை சந்தித்தது குறித்த புகைப்படங்களை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதோடு ஆளுநர் ரவியால் இனி அதிமுக நிச்சயம் தலைநிமிர்ந்து நிற்கும் என்று பதிவிட்டுள்ளார். ஆளுநரால் எப்படி அதிமுக தலைநிமிர்ந்து நிற்கும் என்று தற்போது கேள்வி எழுந்துள்ள நிலையில் பிளவு பட்டு கிடக்கும் அதிமுகவை ஒற்றுமைப்படுத்த பாஜக பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளதால் ஆளுநர் ரவியும் அதிமுகவை ஒற்றுமைப்படுத்த உதவுவார் என்று கூறப்படுகிறது. எம்ஜிஆர் காலத்தில் அதிமுக கட்சியில் கேசி பழனிசாமி தன்னுடைய 13-வது வயதில் சேர்ந்தார்.

எம்ஜிஆரின் இளைஞர் அணிக்கு துணை செயலாளராக நியமிக்கப்பட்ட கே.சி பழனிசாமி கடந்த 1985-ஆம் ஆண்டு காங்கேயம் தொகுதியில் வேட்பாளராக நியமிக்கப்பட்டார். அப்போது 16,000 வாக்குகள் வித்தியாசத்தில் கேசி பழனிசாமி வெற்றி பெற்று 24 வயதில் எம்எல்ஏவானார். அதன் பிறகு எம்பி பதவி, ஜெயலலிதாவின் விசுவாசி, இரட்டை தலைமையின் கீழ் முக்கிய நிர்வாகி என பல்வேறு பொறுப்புகளை வகித்த கே.சி பழனிசாமி, ஒரு கட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக பேசினார். இதனால் கட்சியிலிருந்து கேசி பழனிசாமி நீக்கப்பட்டார். இதனால் அதிமுகவில் இருந்து தான் தான் நீக்கப்பட்டதற்கு வழக்கு உட்கட்சி பூசல்கள் போன்றவற்றில் அதிமுகவுக்கு குடைச்சல் கொடுத்து வந்த கே.சி பழனிசாமி தற்போது ஆளுநரை சந்தித்து பேசி உள்ளார். மேலும் ஆளுநரால் இனி அதிமுக தலைநிமிர்ந்து நிற்கும் என கே.சி பழனிசாமி பதிவிட்டுள்ளது தற்போது கவனிக்கத்தக்க ஒன்றாக மாறியுள்ளது

.https://twitter.com/KCPalanisamy1/status/1629477579160977408?s=20