தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் ஊராட்சி ஒன்றியம் பட்டீஸ்வரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள ஆய்வகத்தில் மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கிறதா? தேவையான மருந்து, மாத்திரைகள் இருக்கிறதா? என்பது பற்றியும் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். அதனைத் தொடர்ந்து திருவலஞ்சுழி ஊராட்சியில் தஞ்சை – கும்பகோணம் இடையே தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் திட்டத்தின் கீழ் தார் சாலை அமைக்கும் பணியினை பார்வையிட்டுள்ளார்.

அதேபோல் மேலகொற்கை ஊராட்சியில் புதிதாக கட்டப்படும் அங்கன்வாடி மையம் மற்றும் கட்டுமான பணி போன்றவற்றைகளை ஆய்வு செய்துள்ளார். மேலும் கொற்கை ஊராட்சி புதுச்சேரியில் செயல்படும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் நேரடி கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளின் எடை போன்றவற்றை கேட்டறிந்தார். அதனை தொடர்ந்து கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி திட்ட பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.