இந்தியாவில் டிஜிட்டல் மூலமாக பண பரிவர்த்தனை அதிகரிது வரும் நிலையில்  பண மோசடிகளும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  பொதுவாக ஓடிபி மூலமாக பணம் மோசடிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கான otp அமைப்பில் சில மாற்றங்களை கொண்டு வர ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.

அதாவது டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளின் பாதுகாப்பை வலுப்படுத்தும் விதமாக ரிசர்வ் வங்கி பயனர்களின் ஒப்புதல் மற்றும் பயோமெட்ரிக் அங்கீகாரம் போன்றவற்றை செயல்படுத்த இருப்பதாக அறிவித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த புதிய செயல்முறை அமலுக்கு வந்தால் ஆன்லைன் மூலமாக நடைபெறும் பண மோசடிகள் குறைய வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.