உத்திரபிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 70-க்கும் மேற்பட்டவர்கள் நேபாளத்திற்கு ஆன்மீக சுற்றுலா சென்றுள்ளனர். இந்நிலையில் நேபாளத்தின் திரிவேணி பகுதியில் உள்ள மத வழிபாட்டு தளத்திற்கு சென்று விட்டு இன்று மாலை எல்லை வழியாக இந்தியா திரும்பிக் கொண்டிருந்தபோது இந்தியா – நேபாள எல்லையில் நேபாளத்தின் துஹிபெரி என்னும் பகுதியில் பஸ் வந்தபோது எதிர்பாராத விதமாக பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் பஸ்ஸில் பயணம் செய்த 70 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.