அமைச்சர் த.மோ அன்பரசன் திமுக அரசு 20 கிலோ அரிசியும் மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாயும் கொடுக்கவில்லை எனில் இன்று தமிழ்நாட்டில் பல குடும்பங்கள் பட்டினியாக தான் கிடக்கும். வறுமையில் கஷ்டப்படுவார்கள் என்று கூறியுள்ளார். இத சர்ச்சையாக மாறிய நிலையில் பாஜக கட்சியின் மூத்த தலைவர் எச். ராஜா கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, நாட்டில் தமிழகம்  மற்றும் கேரளாவில் மட்டும்தான் மக்கள் 3 வேலையும் சாப்பிடுகிறார்கள். மகாராஷ்டிரா உட்பட மற்றும் மாநிலங்களில் மக்கள் ஒருவேளை மட்டும்தான் உணவு உண்ணுகிறார்கள் என்று உண்மைக்கு புறம்பான கருத்துக்களை பேசி உள்ளார்.

 

 

பிரதமராக மோடி பொறுப்பேற்ற பிறகு ஒவ்வொரு நபருக்கும் தலா 5 kg அரிசியும், ஒரு கிலோ பருப்பையும் நாடு முழுவதும் மானியமாக வழங்கி வருகிறார். அதுவும் கொரோனா காலத்தில் இருந்து இலவசமாக வழங்கப்படும் நிலையில் ரேஷன் கடைகள் மூலமாக தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் மத்திய அரசு உணவு தானியங்களை வழங்குகிறது. ஆனால் உண்மை நிலையை மறந்து திமுக அரசு கொடுக்கும் ஆயிரம் ரூபாய் பணத்தில் தான் மக்கள் பசியாறுகிறார்கள் என்று கூறியுள்ளார்.

திமுக அரசு இந்த மகளிர் உரிமைத்தகையை பால் வரி, சொத்துவரி, வீட்டு வரி என்ன பல வரிகளை உயர்த்தி மக்களிடம் வசூலித்து விட்டு தான் கொடுக்கிறார்கள். திருடர்கள் வழிப்பறி செய்வது போல் திராவிட ஆட்சியாளர்கள் என்ற பெயரில் அனைத்து வரிகளையும் உயர்த்தி கட்டண உயர்வு என்கிற பெயரில் மக்களிடமிருந்து வழிப்பறி செய்கிறார்கள்.

மக்களிடமிருந்து பல மடங்கு கட்டணத்தை வசூலித்து விட்டு தான் இந்த மகளிர் உரிமைத்தொகை பணத்தை அவர்கள் கொடுக்கிறார்கள். தமிழகத்தில் திமுக ஆட்சியில் கடன அதிகமான நிலையில் கடன் வாங்கி ஆட்சி நடத்தும் இந்த அரசு கடன் வாங்கி ஆட்சி நடக்கும் போது இவ்வளவு ஆணவமாக பேசுகிறதே.? மேலும் மாதம் ரூபாய் ஆயிரம் வழங்குவதை இந்த திமுக அரசு இவ்வளவு பெருமையாக பேசும் நிலையில் அவர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு ஒவ்வொரு மக்களின் மீதும் உள்ள கடன் தொகை அதிகரித்துள்ளது என்று பதிவிட்டுள்ளார்.