இந்தியாவின் முன்னணி வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி வாடிக்கையாளர்கள் தங்கள் கேஒய்சி விவரங்களை வருகின்ற ஆகஸ்ட் 12ஆம் தேதிக்குள் புதுப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மார்ச் 31ம் தேதிக்குள் கேஒய்சி-ஐப் புதுப்பிக்காத வாடிக்கையாளர்களுக்கு பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவிப்புகள் பொருந்தும். வங்கி சேவைகள் தடையின்றி செயல்படுவதற்கு கேஒய்சி கட்டாயம் என்று வங்கி தெளிவுபடுத்தி உள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.