நிகழ்ச்சி ஒன்றில் பேசிய செல்லூர் ராஜூ, தமிழ்நாட்டில் பெண் காவலருக்கே பாதுகாப்பில்லாத நிலை உள்ளது; இதனால், திமுக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் . திமுக ஆட்சியில் தமிழ்நாட்டு மக்கள் துன்பத்தில் இருக்கின்றனர். திருந்தாத உள்ளங்கள் இருந்து என்ன லாபம்? திமுக ஆட்சியில் இருந்தும் மக்களுக்கு என்ன லாபம் கிடைத்துள்ளது. எம்ஜிஆர் மறைந்து 38 வருடங்கள் ஆகிவிட்டது. இன்னும் கூட மக்கள் அவரை நினைத்து கொண்டு தான் இருக்கிறார்கள். அவரை போல எவராலும் இனியும் வர முடியாது.
எம்ஜிஆர் போன்ற நபர் இப்போது யாரும் இல்லை. ஏழைகள் மட்டுமின்றி கட்சிப் பாகுபாடு இன்றி உதவி செய்தவர். மக்களுக்கான திட்டங்களை அதிமுக விலையில்லா மக்கள் நலத்திட்டம் என்று கூறிவந்த நிலையில் திமுக அரசானது மக்கள் நலத்திட்டங்களை இலவசம் என்று கூறி மக்களை அவமானப்படுத்தி வருகிறார்கள். அதிமுக கொண்டு வந்த நலத்திட்டங்களை திமுக அரசு நிறுத்திவிட்டது. அவர்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதியான மகளிர் உரிமை தொகையையும் இன்னும் வழங்கவில்லை. அரசு ஊழியர்களுக்கு திமுக அரசு அல்வா கொடுத்து வருகிறது என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.