ராஜஸ்தானின் டீக் மாவட்டத்தில் நடந்த திருமண ஊர்வலத்தின் போது, காரின் கூரையில் பட்டாசு வெடித்ததால் கார் தீப்பிடித்து முழுவதுமாக எரிந்து சாம்பலான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானாவிலிருந்து திருமண ஊர்வலம் வந்தபோது, ஜுர்ஹரா காவல் எல்லைக்குட்பட்ட கோசிங்கா கிராமத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

திருமணக் கொண்டாட்டத்தின் போது, ஊர்வலத்தில் வந்த சிலர் காரின் மேற்கூரை மீது ஏறி நின்று பட்டாசுகளை வெடித்துள்ளனர். அப்போது, எதிர்பாராதவிதமாகப் பட்டாசின் தீப்பொறி ஒன்று காரின் உட்பகுதியில் விழுந்துள்ளது.

தீப்பொறி விழுந்த சில நொடிகளிலேயே தீ கார் முழுவதும் வேகமாகப் பரவி, வாகனம் முழுவதையும் தீப்பிழம்பாக மாற்றியது. கண் இமைக்கும் நேரத்தில் கார் எரியத் தொடங்கியதால், ஊர்வலத்தில் வந்த பொதுமக்கள் அனைவரும் அலறியடித்து ஓடினர்.

திடீரெனக் கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் திருமண ஊர்வலத்தில் இருந்தவர்களிடையே பீதியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியது.

“>

இந்தத் தீ விபத்தில் யாருக்கேனும் காயங்கள் ஏற்பட்டுள்ளனவா அல்லது பிற சேதங்கள் என்ன என்பது குறித்த கூடுதல் விவரங்கள் உடனடியாக வெளியாகவில்லை. காவல்துறை இது குறித்துத் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.