ஹரியானா அரசு மருத்துவமனைகளில் எந்த மாதிரியான உடை அணிந்து வர வேண்டும் என்பது பற்றி அரசு ஆலோசனை மேற்கொண்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இதனை ஹரியானாவின் சுகாதாரத்துறை அமைச்சர் அணில் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, இந்த புதிய ஆடை கட்டுப்பாட்டு முறை பணியில் உள்ளவர்களுக்கு 24 மணி நேரமும் பொருந்தும். இந்த முறை வார இறுதி நாட்கள் மற்றும் இரவு நேர பணிகளில் ஈடுபட்டவர்களுக்கும் பொருந்தும்.

இந்த புதிய நடைமுறையை பின்பற்றாதவர்கள் வேலைக்கு வந்திருந்தாலும் அவர்கள் வராததாகவே எடுத்துக் கொள்ளப்படுகிறது. சில சமயங்களில் ஆடை கட்டுப்பாடு என்பது சில இடங்களுக்கு தேவையானதாக இருக்கும். அதே போல் மருத்துவமனைக்கு இந்த புதிய ஆடை கட்டுப்பாடும் அவசியமாகிறது. நேரங்களில் சிகை அலங்காரம், நகைகள் அதிகம் அணிந்து கொண்டு வருவது, பெரிய அளவில் நகங்கள் வைத்திருப்பது போன்றவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும் ஜீன்ஸ்,  குட்டைப் பாவாடைகள் பணி ரீதியிலான உடை கிடையாது. அதனால் அது அனுமதிக்கப்படாது. அதை போல் டீ சர்ட் இருக்கமான பேண்ட் போன்றவற்றையும் அனுமதிக்க முடியாது.

இது தொடர்பான புதிய நடைமுறை பணி புரியும் இடத்தில் ஒழுக்கம், ஒற்றுமை மற்றும் சமத்துவம் போன்றவற்றை வலியுறுத்தவை கொண்டுவரப்படுகிறது. இதன் மூலமாக பணி புரிபவர்கள் மருத்துவம் சார்ந்த தொழிலுக்கு தகுந்தார் போலவும், பொதுமக்களிடம் நல்ல மதிப்பையும் ஏற்படுத்த பெற முடிகிறது. இந்த புதிய நடைமுறை அரசு மருத்துவமனைகளில் உள்ள மருந்தகங்கள், தொழில்நுட்பம், சமையலறை,  துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்ட துறைகளில் பணிபுரியும் அனைவருக்கும் பொருந்தும். அதனால் அனைத்து பணியாளர்களும் தூய்மையான சீருடை அணிந்து வர வேண்டும் அதேபோல் தூய்மையான பழக்க வழக்கங்களை கடைபிடிக்க வேண்டும். அதேபோல் ஆண்களுக்கும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது ஆண்களின் தலைமுடி சட்டை காலரின் அளவிற்கு மேல் இருக்கக் கூடாது. தனியார் மருத்துவமனைகளில் ஒருவரை கூட சீருடை இல்லாமல் காண முடியாது என தெரிவித்துள்ளார்.