திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் வைத்து பயிற்சி வகுப்பு நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் செந்தமிழ் செல்வன் மற்றும் ஆசிரியர்கள் சிவகுரு வெங்கடாஜலபதி, கணேசன் போன்றோர் பேசியுள்ளனர். இதில் வலங்கைமான், குடவாசல், நன்னிலம், திருவாரூர், கொரடாச்சேரி போன்ற பகுதிகளில் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். வருகிற ஏப்ரல் மாதம் பத்தாம் வகுப்பு பொது தேர்வு தொடங்குகிறது.

இந்த தேர்வில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மாணவர்களை 100% தேர்ச்சி பெற செய்ய இந்த பயிற்சி வகுப்பு நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மாவட்ட கல்வி அலுவலர் மாதவன் இந்த பயிற்சியை தொடங்கி வைத்துள்ளார். இதில் 100% தேர்ச்சியை இலக்காக கொண்டு மாணவர்களை எவ்வாறு தேர்வுக்கு தயார் செய்வது? தேர்வு குறித்த பயத்தை போக்குவது எப்படி? என்பது குறித்து நன்னிலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் பேசி உள்ளனர்.