திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் வீரபாண்டி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2021-ஆம் ஆண்டு வீரகாந்தி கீரனூர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது வீரபாண்டி பெண் போலீஸ் ஒருவதற்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் வீரபாண்டி உடனடியாக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். அப்போதைய திண்டுக்கல் சரக டிஐஜி விஜயகுமாரி இது தொடர்பாக விசாரணை நடத்துமாறு உத்தரவு பிறப்பித்தார்.

அதன் பிறகு வீரகாந்தி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் விசாகா கமிட்டி வீரகாந்தி, பாதிக்கப்பட்ட பெண் போலீஸ் ஆகியோரின் செல்போன் உரையாடல் பதிவு, குறுந்தகவல் உள்ளிட்ட ஆதாரங்களை ஆய்வு செய்த போது இன்ஸ்பெக்டர் மீதான புகார் உறுதியானது. இது தொடர்பான அறிக்கையை அரசுக்கு விசாகா கமிட்டி சமர்ப்பித்தது. அதன் அடிப்படையில் திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி அபிநவ் குமார் வீரகாந்தியை பணிநீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார்.