முதல் முறையாக நடப்பு நிதி ஆண்டில் அகவிலைப்படியை உயர்த்துவதற்கு அரசானது திட்டமிட்டிருக்கிறது. அனைத்திந்திய நுகர்வோர் விலை குறியீட்டு எண் ஏப்ரல் மாத தரவுகளின் படி ஊழியர்களின் சம்பளம் அகவிலைப்படியாக சுமார் 3-4 சதவீதம் வரை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்த அதிகரிப்பின் அளவு மே மற்றும் ஜூன் மாதங்களில் பதிவு செய்யப்பட்ட புள்ளி விபரங்களை பொறுத்தது. இந்த மாதங்களில் சாதகமான AICPI புள்ளி விபரங்கள், அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் ஆகிய இரண்டிலும் 4% உயர்வுக்கு வழிவகுக்கும்.

இப்போது ​​மத்திய பணியாளர்களுக்கு 42% அகவிலைப்படி வழங்கப்படுகிறது. அகவிலைப்படியை மேலும் 4% உயர்த்தினால், ஊழியர்களின் அகவிலைப்படி 46 சதவீதமாக அதிகரிக்கும். அதோடு DA உயர்வு தவிர்த்து ஊழியர்களின் அடிப்படை சம்பளம் ஜூலை மாதத்தில் உயரக்கூடும். மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளமானது ரூ. 8,000 உயர்த்தப்பட்டு ஒரு ஊழியரின் குறைந்தபட்ச சம்பளம் ரூ. 18,000 ஆகவும் அதிகபட்சம் ரூ.26,000 ஆக இருக்கும் எனவும் எதிர்பார்க்கபடுகிறது.