அரசு ஊழியர்களின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம்….. தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!!!

தமிழக அரசு ஊழியர்களின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட கணக்குத் தாள்கள் நாளை வெளியிடப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதன்படி, பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் பணிபுரியும் 5,45,297 அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதியத் திட்டக் கணக்குத் தாட்கள் நாளை காலை வெளியிடப்படும் என தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

மேலும், http://cps.tn.gov.in/public என்ற இணையதளத்தில் சந்தாதாரர்கள் தங்களின் ஓய்வூதியத் திட்டக் கணக்குத் தாட்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.