பண்டிகை காலங்களில் பொதுமக்கள் வெளியூரில் இருந்து சொந்த ஊருக்கு திரும்புவார்கள். இதனை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகளில் அவர்களின் இஷ்டம் போல கட்டணத்தை வசூலிப்பர்கள். இதனால் பயணிகள் மிகவும் அவதிப்படுவார்கள். அந்தவகையில் தற்போது கோடை விடுமுறை காலம் என்பதால் ஆம்னி பேருந்துகள் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியுள்ளன.

இதனால் மக்கள் பெரிதும் அவதியடைகின்றனர். இந்நிலையில், தனியார் ஆம்னி பேருந்துகளுக்கான கட்டணத்தை நிர்ணயம் செய்ய அரசிடம் வழிமுறைகள் இல்லை எனக்கூறி அமைச்சர் சிவசங்கர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். அதேசமயம், கூடுதல் கட்டணம் வசூல் செய்யும் தனியார் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.