மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் மஞ்சு வாரியர். இவர் தமிழில் தனுசுடன் இணைந்து அசுரன் மற்றும் நடிகர் அஜித்துடன் இணைந்து தற்போது துணிவு திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்த இரண்டு படங்களுமே வெற்றி பெற்றதால் நடிகை மஞ்சு மாறியதற்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நடிகை மஞ்சு வாரியர் விரைவில் அரசியலில் குதிக்கப் போவதாகவும் பல கட்சிகளிடமிருந்து அவருக்கு அழைப்பு வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த செய்திகளுக்கு தற்போது நடிகை மஞ்சு வாரியர் விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது, தேர்தல் சமயங்களில் எப்போதும் நான் அரசியலில் ஈடுபட போவதாக தகவல்கள் வெளியாவது வழக்கம்தான். ஆனால் அப்படி எந்த திட்டமும் என்னிடம் கிடையாது. எனக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணமும் இல்லை. நடிகர் அஜித்துடன் துணிவு திரைப்படத்தில் நடித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவருடன் சேர்ந்து பைக் பயணம் சென்ற அனுபவத்தை மறக்கவே முடியாது. நடிகர் அஜித் மிகவும் எளிமையானவர். அவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன் என்று கூறியுள்ளார். மேலும் இந்த தகவல்கள் மூலம் நடிகை மஞ்சுவாரியர் அரசியலில் ஈடுபட போவதாக வெளிவந்த தகவல்கள் உண்மையில்லை என்பது தெரிய வந்துள்ளது.