தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் யோகிபாபு. அண்மையில் விஜய் நடிப்பில் வெளியாகிய வாரிசு திரைப்படத்தில் இவர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். பல்வேறு முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கும் இவர், இப்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத காமெடி நடிகராக வலம் வருகிறார். இந்நிலையில் யோகிபாபு லதா ஆர்.மணியரசு டைரக்டில் புது படத்தில் நடிக்கிறார்.
இப்படத்தில் “மெஹந்தி சர்க்கஸ்” மாதம்பட்டி ரங்கராஜ், ஆத்மிகா போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த நிலையில் இப்படத்தின் தலைப்பு, டீசர் வெளியாகி உள்ளது. அந்த வகையில் இப்படத்திற்கு “மிஸ் மேகி” என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்தியன் பாட்டி கெட்டப்பில் வித்தியாச தோற்றத்தில் யோகி பாபு இடம்பெற்றிருக்கும் இந்த டீசர் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.