தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில், தில் ராஜு தயாரிப்பில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் கடந்த 11-ஆம் தேதி ரிலீஸ் ஆகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 திரைப்படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் தொடங்கப்பட்ட நிலையில் படத்தில் திரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், கௌதம் மேனன், மிஷ்கின் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் தளபதி 67 திரைப்படத்தில் பிக் பாஸ் பிரபலம் இலங்கையைச் சேர்ந்த ஜனனி இணைந்துள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து ஜனனியிடம் கேட்டபோது அதை நான் சொல்வதை விட தளபதி 67 படக்குழு சொன்னால்தான் நன்றாக இருக்கும் என்று கூறினார். இதிலிருந்தே ஜனனி தளபதி 67 திரைப்படத்தில் நடிப்பது உறுதியாகிவிட்டதாக கூறப்படுகிறது. பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்து எலிமினேட் செய்யப்பட்டாலும் எடுத்த எடுப்பில் தளபதி படத்தில் நடிப்பதற்கு ஜனனிக்கு வாய்ப்பு கிடைத்தது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. மேலும் தளபதி 67 திரைப்படத்தின் ஐடி கார்டு ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வரும்நிலையில், கன்னட நடிகர் ரக்ஷித் ரெட்டியும் படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.